தாய்மாமன்

கல்லூரி விடுமுறை
நகரத்து வாழ்க்கை
எப்போதோ டவுசர் போட்ட
கிராமத்து தாய்மாமனை பார்க் ஆசை
கிளம்பிவிட்டேன்
நாகரிக ஜீன்ஸ் சட்டை உடையில்
கிராமத்து பெரிசுகளின்
நலம் விசாரிப்பு
தம்பிக்கு எந்த ஊரு
உள்ளுக்குள் சிரிக்கிறேன்
கள்ளமில்ல உள்ளம் எண்ணி
வீட்டை அடைகிறேன்
வாசலில் தாய் மாமன்
நண்பர்களுடன்
சொக்கட்டான் ஆடிக்கொன்டு
என்னையே கேக்கிறான்
கும்பிடறேன் சார் யார் வேணும்
என்னை குனிந்து பார்கிறேன்
என்னையே நொந்துக்கொண்டேன்
வீட்டுக்குள் ஓடுகிறேன்
பாவாடை தாவணியில் வெளியே
வருகிறேன்
இப்போதும் தெரியவில்லை
என் பள்ளிகால தோழிதான்
ஆனந்தி எப்போவந்தே விசாரிப்பு
தாய் மாமனை ஓரகண்ணால் பார்க்கிறேன்
அவன் முகத்திலோ திகைப்பு
நீ நீயா உளறல்
ஆமாண்டா மொக்கை மச்சான் என்னோட உளறல்
ஆசையுடன் தட்டமாலை
ஆண் உடம்பே படாத சுகம்
கள்ளமில்லா மாமனை
கைபிடிக்க போகும்
சந்தோசத்தில்
அவனில் என் மனதை பறிகொடுத்தேன்
காரணம்
அவன் கள்ளம் கபடமற்ற உள்ளத்துக்காக

எழுதியவர் : செல்வம் சௌம்யா (1-Nov-15, 7:03 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 281

மேலே