காதல் என்ற அம்பு எடுத்து
காதல் என்ற அம்பெடுத்து
உன் இதயம் பார்த்து நானும் விட்டேன்
உன் நெஞ்சில் வந்து தைக்கலியா
சிவத்த மச்சான் உன் நெஞ்சிலே
பார்வை என்ற வேலெடுத்து
பாவை நானும் பாய்ச்சிவிட்டேன்
பாக்காம போறதென்ன
பதறுதடா என் மனசு
வேட்டியை நீ மடிச்சிகட்டி
வீதியிலே நடக்கையிலே
இழுக்குமடா என் மனசு
அந்தி சாயும் நேரம் வந்த
பூக்குமடா என் உதட்டில் வியர்வை பூக்கள்
விளக்கேற்றும் நேரம் வந்தால்
சிலீர்க்குமடா என் மேனி
கதவடைக்கும் நேரம் வந்தா
துடிக்குமடா என் இதயம்