ட்விட்டரதிகாரம்

முன்குறிப்பு:

இவை வெண்பாக்கள் அல்ல, வெண்பாம்கள், அதாவது, வெண்பாவின் ஒலி, எதுகை, மோனை, இயைபு போன்றவை இருக்கும், இலக்கணம் அங்கங்கே குறைபடலாம், அது தெரிந்தே செய்யும் பிழை என்பதறிக

1. இலவசமாய் ட்விட்டரில் இன்றே புகுந்திடுநீ
வளவளன்னு பேசலாம் வம்பு

2. ஒன்ஃபார்ட்டி எழுத்துகளில் உலகத்தை வலம்வரலாம்
மண்டைக்குள் சரக்கிருந்தா மஜா

3. நண்பர்கள் இங்குஉண்டு, நச்சரிப்பும் மிகஉண்டு,
பண்பாளர் பலர்உண்டு, பழகு

4. புத்தியில் தோன்றியதைப் பட்டுன்னு எழுதிவைக்கச்
சத்தியமா ட்விட்டர்தான் சிறப்பு

5. சுருக்கமா எழுதுதற்கு ஜோரான நெட்ப்ராக்டீஸ்,
வருத்தம்ஏன்? உன்கருத்தை விளம்பு

6. இணையத்தில் தென்படும் இனிப்பான மேட்டரெல்லாம்
அனைவர்க்கும் லிங்காக்கித் தா

7. ஆரேனும் ஒருகருத்தை அழகாகச் சொல்லிவிட்டால்,
ஆர்டிசெய் வாழ்த்துவார் அவர்
RT = ReTweet

8. பேச்சுமட்டும் போதாதா? படங்களும் காட்டிடலாம்
கூச்சமின்றி ட்விட்பிக்கில் குதி
Twitpic = Image service for Twitter

9. ட்ரெண்டில் வரணுமா, ட்விட்டரில் உன்னுடைய
ஃப்ரெண்ட்ஸை அனுசரித்துப் பரவு

10. அளவாக ட்வீட்டினால் அமுதேதான், அனுபவி,
வளமாகும் நாள்தோறும், வாழ்த்து!

(நன்றி: ‘பண்புடன்’ இணைய இதழ்

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி (3-Nov-15, 12:12 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 83

மேலே