உலகம்‘ நான்கெழுத்து
உலகம்‘ நான்கெழுத்து!
உலகில் வாழுகின்ற ‘மக்கள்‘ நான்கெழுத்து!
வாழ்க்கையின் ‘பிறப்பு‘ நான்கெழுத்து!
பெற்றோர் பெறும் ‘குழந்தை‘ நான்கெழுத்து!
பள்ளி செல்லும் ‘மாணவன்‘ நான்கெழுத்து!
மாணவன் ‘இளைஞன்‘ ஆவது நான்கெழுத்து!
இளைஞர்களின் ‘கல்லூரி‘ நான்கெழுத்து!
கல்லூரியில் பயிலும் ‘படிப்பு‘ நான்கெழுத்து!
படிப்பு தருகின்ற ‘பட்டம்‘ நான்கெழுத்து!
பட்டத்தினால் கிடைக்கின்ற ‘ஊதியம்‘ நான்கெழுத்து!
ஊதியம் தருகின்ற ‘மதிப்பு‘ நான்கெழுத்து!
மதிப்புடன் பெண்ணுக்குக் ‘கணவன்‘ ஆவது நான்கெழுத்து!
கணவன் ‘தலைவன்‘ ஆவதும் நான்கெழுத்து!
தலைவன் முதுமையினால் ‘கிழவன்‘ ஆவது நான்கெழுத்து!
இறுதியில் தூக்கிச் செல்லும் ‘நால்வர்‘ நான்கெழுத்து!
நால்வர் கொண்டு சேர்க்கும் இடம் ‘சுடுகாடு‘ நான்கெழுத்து!
சுடுகாடு உள்ள இடமோ ‘உலகம்‘ என்னும் நான்கெழுத்து!