முத்த ஒத்தடம்

குளிர்க்காய்ச்சலுக்கு வீட்டுமருந்துசெய்
வெண்ணீர் ஒத்தடம் குடு
இதெல்லாம் என்னாதே ம்ம்ம்
என் கனவுகளில்
நீ கொடுத்த முத்தங்களின்
வெம்மையைவிடவா
இவைகள் மேலும் செய்துவிடப்போகின்றன
நீ குப்புறப்படுக்கையில்
கற்பனை மேகமூட்டங்களில் பிறப்பெடுக்கும்
இந்த சாக்லைட் ஊற்றின்
வாய் முளைத்த பகுதியை மென்றுக்கொள்
உறைந்து திடமாகிய கிளைகளால்
உருவான கைகள்
உனை அணைக்கின்றவரை
என் மார்பில் சாயும்
அந்நேரத்தை அகலப்படுத்திக்கொள்
அதற்குப்பின்னால் வேண்டாம்
நான் பொல்லாதவன் ம்ம்ம்
உனக்கு நிறைய கெட்டப்பழக்கங்களை
கற்றுக்கொடுத்தாலும்
கொ(கெ)டுத்துவிடுவேன் ஆதலால் ம்ம்ம்ம்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (3-Nov-15, 8:36 pm)
Tanglish : mutha othadam
பார்வை : 196

மேலே