சொல்வீரே சரியா வென்றே

தாய்ப்பாடுந் தாலாட்டில் சொக்கிப் போகும்
***தாய்மடியே குழந்தைக்குத் தூளி யாகும் !
பாய்போட்டுப் படுத்தாலும் பக்கம் வந்து
***பாசமுட னணைத்தபடி யுடனே தூங்கும் !
சாய்ந்தாடுந் தலையாட்டிப் பொம்மை கண்டால்
***தானாடிக் கண்ணாடி முன்னே பார்க்கும் !
சேய்போல மகிழ்வுதரும் சொந்த முண்டோ ?
***செகத்தோரே சொல்வீரே சரியா வென்றே ...!!!

( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( காய் காய் மா தேமா
காய் காய் மா தேமா )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (5-Nov-15, 12:17 am)
பார்வை : 136

மேலே