என் தலையணை

என்னவனே !
நான் சிரித்தால், உன் கன்னங்களில் குழி
நான் சிந்தித்தால், என் விழி மேல் உன் விழி !
நான் சண்டையிட்டால் , நீ துவண்டுடுவாய்
நான் மூச்சு விட்டால்., நீ பூரிப்பாய்
நான் உன்னை மடியிலிட்டால் , நீ மெல்ல மலர்வாய்
நான் மனம் உடைந்தால் நீயே அரவணைப்பாய்
நான் அழுதால் , அதை விழும் முன் தாங்குவாய்
நீயோ என் துயர்(கண்ணீர்) துடைப்பாய் , உடன் நான் அளிப்பதோ "உப்புகரைசலின் அரிதாரம்" பரிசாய் !
என் இதயம் தாங்கிய தூயவனே !
நீ மட்டும் அல்ல எனக்காக... இனி நானும் உன் அருகில் சிற்றுழியும் செவி சாய்க்க...!!!