தீபாவளி வாழ்த்து

விளக்கின் ஒளியில் காணுகின்றேன்
உன்னை கண்ணா
கண் இமைக்கும் பொழுதினிலே
மனதில் நிறைந்தாய் நீ!!
புல்லாங்குழல் இசை எனக்கு கேட்கவில்லை
ஆனால் உன் கருணை மழையில் நனைகின்றேன் நான்...
கண்ணா!! கண்ணா!! என வாய் இசைக்க
வருவாய் ! வருவாய் ! என மனம் நினைக்க
தந்தாய் எனக்கு வரம் தனை
குடும்பம் என்ற செல்வத்தை
கண் கூப்பி வணங்குகின்றேன்
கண்ணா !! கண்ணா!!!
அன்புடன்
திருமதி. மைதிலி ராம்ஜி