தள்ளாடாத வீதிகள் வேண்டும்

இறைவனிடம் ஒரு முறையீடு
குடி மறுக்கும் ஒரு மனிதன்
இங்கே கோலோச்ச வேண்டும்
குடிமக்கள் வாழ நினைப்பவன்
அடுத்த முறை அரசு கட்டிலில் அமர வேண்டும்
படி அமைத்து கோவில் கொண்டு
பக்த்தர்களுக்கு அருளும் இறைவா
அடி பணிந்தேன் செங்கோல் தடி கொண்டு
இந்த நீதி நீ செய்திட வேண்டும் !
ஆடாத கோபுரமும் அசையும் ஆலய மணி நாவில்
ஓம் எனும் இசை ஒலிக்கும் எழில் ஊரனைத்தும்
தள்ளாடாத வீதிகள் வேண்டும் தமிழகத்தில் !
----கவின் சாரலன்