சரமழை வித்தகம்

சரமழை என்பது வெண்பாவைச் சுவைபட எழுதும் யுக்திகளுள் ஒன்று. நாமெல்லோரும்

சிவாஜி
வாயிலே
ஜிலேபி

என்ற வாக்கியத்தைக் கேள்வி பட்டிருப்போம். அதைப் போலவே பாட்டெழுதுவதே இந்தச் சரமழை ஆகும்.


அழகே அழகாய்த் தொலைந்தேன் மலைத்தேன்
அழகாய்த் தொலைவில் உயிர்த்தேன் - மெழுகாய்த்
தொலைந்தேன் உயிர்த்தேன் இடையில் தொடர்த்து
மலைத்தேன் மெழுகாய்த் தொடர்ந்து !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (7-Nov-15, 7:52 pm)
பார்வை : 88

மேலே