மிச்சங்கள்

மிச்சங்கள்

இரைதேடிக் களைத்து
இரவின் விழிப்பினில்
இல்லம் திரும்பின
பறவைகள்...

இன்றைய தேடல்
முழுமைபெற்றதாய்
முகத்தில் மகிழ்வில்லை
சிறு மழையின்
நனைதலில்
நிறைந்திருந்தது
மனது...

மனதிற்கு
உணவில்லாதபோது
சிறிது வயிற்றுக்கு
ஈயப்படும்

கொஞ்சம் ஓய்விற்குப் பின்
பெரும் நம்பிக்கையுடன்
புது வேகத்துடன்
புறப்படும் அதிகாலையிலே

சோர்ந்துவிடாதே
மனிதா...

உற்றுநோக்கு
இன்னும் ..ஆழமாய்
இப்பிரபஞ்சத்தை

மிச்சமிருக்கின்றன
இரகசியங்கள்...!
--------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (6-Nov-15, 9:42 am)
Tanglish : michangal
பார்வை : 563

மேலே