பிடிவாதம்

எத்தனை பிடிவாதமாக
என்னை மறந்தாயோ

அத்தனை பிடிவாதமாக
என் மனம்
உன்னை மறக்க மறுக்கிறது

உன் பிடிவாதம் மௌனம்
என் பிடிவாதம் கண்ணீர்

யார் பிடிவாதம் தோற்கும் ?

எழுதியவர் : மின்.அணு (7-Jun-11, 7:04 pm)
சேர்த்தது : minn.anu
பார்வை : 302

மேலே