பெயர் பொருள் தேடல்

வழியனுப்ப வந்த உறவுகள்
விழிகளுக்குப் புள்ளியாகிக்
கரைந்த பின்பும் கூட
சன்னல் கம்பிகளோடு ஒட்டிய கன்னம்
சமாதானம் ஏற்க வில்லை
கனத்த மனம் கக்கிய திரவம்
கண்கள் கடந்து விழுவதை
விரல்களுக்குத் துடைக்க
விருப்பமில்லை
அடுத்திருக்கும் அன்னியர்
அறிந்திடாத வண்ணம்
மேலிழுத்துப் பெருமூச்சு வாங்குவதாய்
மெல்லத் தேம்புகிறது இதயம்
ஆத்தாளின் கருணைக் கிழங்கு மசியல்
அட்டையில் எழுதியே
தொட்டுக் கொள்ளவேண்டும்
காலை என் உறக்கம்
கலைத்து மகிழும் தங்கை
கணவன் வீட்டிற்கு சென்றிருப்பாள்
திரும்புகையில்
நட்புக்களுடன் கைகோர்க்க இனி
நான்கைந்து ஆண்டுகளாகலாம்
சிலர் மறந்தும் கூடப் போகலாம்
திருப்ப முடியாத அடகுக்குப்
பெயர் பொருள் தேடல்

...மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (7-Nov-15, 1:45 pm)
சேர்த்தது : மீ மணிகண்டன்
Tanglish : peyar porul thedal
பார்வை : 63

மேலே