கவலைகள்
தினம் தினம் கவலைகள்
படிக்குதே சோக கவிதைகள்
நேரங்கள் உண்டு குறைவுதான்
கவலைகள் இல்லை பொருட்டுதான்
கவலைகள் எனக்கில்லை
என் கவிதைகள் இனியவை
காலையில் கதிரவன் எழவே
கவலைகள் கொள்வதுமில்லை
உனக்கேனோ கவலைகள் சோம்பலில்
தன்னையே சுற்றும் பூமி
சொல்லுதே நமக்கும் சேதி
உனக்குள்ளே பாரின் உண்மைகள்
முறையற்ற கவலைகள்
அவை ராட்சச முதலைகள்
கவலைகள் எல்லாம் நீர் குமிழடா
வெளியே உமிழடா
ருசியான உணவை வேண்டி
கவலைகள் கொள்ளும் மனிதா
உணவேயில்லாமல் பலரிங்கு
நெறியற்ற வாழ்க்கையை எல்லாம்
கவலைகள் சூழ்ந்துகொள்ளும்
நெறியான பாதையை தேடடா
கவலைகள் நிரந்தரம்
இல்லை என்றுனர்ந்திடும்
இதயங்களே என்றும் காணுமே சொர்க வாசமே