ஆசைகளின் அரும்புகள்

அனைவருக்கும் இங்கே
ஆசைகள் அரும்புகின்றன
பிறந்த குழந்தையை
நடக்க வைக்க ஆசை
நடந்திடும் குழந்தையை
பள்ளியனுப்ப ஆசை
பள்ளி சென்ற பிள்ளை
பட்டம் பெற ஆசை
பட்டம் பெற்றதும் நல்ல
பணி தேட ஆசை
பணியில் அமர்ந்ததும்
காதலிக்க ஆசை
காதலலி ஜெயித்திட
கல்யாண ஆசை
கல்யாணத்தின் பரிசாய்
கையிலே குழந்தை
குழந்தை மறுபடி
நடந்திட ஆசை
வாழ்க்கை வட்டத்தில்
ஆசைகள் ஆயிரம்
அரும்பிய வண்ணமே
அரும்பிடும் ஆசையில்
வாழ்க்கைச் சக்கரம்
வளமாக சுழல்கிறது

எழுதியவர் : அருந்ததி கனகரட்ணம் (அருந் (7-Nov-15, 11:01 pm)
பார்வை : 74

மேலே