உரிமைகள் பறிக்கப்படும்

அகிலத்தில் நாம்
ஏழையாய் பிறந்து விட்டால்
உணவு முதல் உறையுள் வரை
உரிமைகள் பறிக்கப்படும்

பள்ளி செல்ல நினைக்கையில்
கல்வியே பறிக்கப்படும்
சாதி வெறி மேலோங்கி
சமத்துவம் பறிக்கப்படும்

தொழில் தேடி செல்கையில்
லஞ்சம் மேலோங்கும்
பணமிருந்தால் வேலையிங்கு
படிப்பிற்கு உரிமையில்லை

கல்யாணச் சந்தையில் கூட
காளைகள் பலர் இங்கு
விலைபேசப் படுகிறார்கள்
கன்னிகள் மத்தியில்

காசிருக்கும் பெண்களுக்கு
கல்யாண யோகமிங்கு
வரதட்சணை சந்தையிலே
இல்லையேல் முதிர்கன்னி முத்திரை

உறவகள் மலிந்திங்கு
உணர்வற்றுக் கிடக்கிறது
உரிமைகள் பறிக்கப்பட்டு
ஜடமாக வாழ்கிறது!

எழுதியவர் : அருந்ததி கனகரட்ணம் (அருந் (7-Nov-15, 11:14 pm)
பார்வை : 75

மேலே