காதலிலே தோற்றுவிட்டேன்
பள்ளி பருவத்தில் முதல் தர மாணவி
அறிவிலும் ஆற்றல் பெற்றேன்
படிப்பிலேயும் அசுரவேகம்
கல்லூரியிலும் தேர்ச்சி பெற்றும்
எதிலும் வெற்றிமேல் வெற்றி
பெற்றும்
என்னை வீழ்த்திவிட்டன காதல்
ஆம்
ஒரு கயவனின் பசப்புவார்த்தையில்
இவ்வளவு திறமையை
அடகு வைச்சேன் காதலிடம்
அவன் காதல் வட்டிகடைக்காரன்
போல
வட்டிமேல் வட்டி போட்டு
என் காதலை மீட்க்கமுடியாமல்
செய்துவிட்டான்
ஆம்
அதிகவரதட்சனை கேட்டு
எதிலும் வெற்றி பெற்ற நான்
காதலில் படுதோல்வி அடைந்துவிட்டேன்
காதல் என்னவென்று புரியாமலேயே