விஞ்ஞானம் -போட்டிக் கவிதை --முஹம்மத் ஸர்பான்

ஒரு துளி இந்திரியம்
சூளோடு கருக்கட்டும்
உயிரோட்டமான அணுச்
செயன்முறை விஞ்ஞானம்
***
உலகமெனும் பாத்திரத்தில்
மனிதன்மூளை எனும் உணவு
வைத்து..,ஆய்வுகள் சுவைக்கும்
பரிசோதனை நுட்பம் விஞ்ஞானம்
***
குன்றையும் மண்ணாக்கி
மலையிலும் தீ மூட்டி
மேகத்தில் செயற்கைத்துளிகள்
நிரப்பும் தர்க்கமும் விஞ்ஞானம்
***
குருடனும் எழுத்துக்கள் உணர்ந்து
செவிடனும் மொழியினை கேட்கும்
காலிழந்த அஞ்சல் ஓட்ட வீரனும்
பதக்கம் வெல்லும் அதிசயமும் விஞ்ஞானம்
***
துடிப்புக்களை நொடியினில் கணக்கிட்டு
திசுக்களின் நலவினை உதிரத்தால்
சோதித்து ஆயுள்கள் வரையறுக்கும்
தீர்க்க தரிசனமும் விஞ்ஞானம்
****
கடல் மேல் விழும் பனித்துளிகள்
ஆழத்தில் ஒளிந்திருக்கும் சிறுவண்டின்
தோளில் உப்பாய் உறையும் கண்கள்
காணாத படிமங்கள் விஞ்ஞானம்
***
நிலம் வெடித்து புற்கள் முளையிடும்
வேளாண்மை நெல்லின் பிரசவம்
மண்புழு தாங்கிய ஈன்றாளின் வேதனை
வியந்தும் புரியாத இயற்கை விஞ்ஞானம்
***
இறந்தவன் உடலின் துடிப்பான
அங்கத்தை வாழ்பவன் தொகுதியில்
பழுதடைந்த பாகத்தில் பொருந்தச் செய்யும்
தொப்புள் கொடி விஞ்ஞானம்
***
உலகத்தின் குறைவடையும் ஆயுளை
நொடிக்கு நொடி கண்களில் காட்டும்
சுவரில் தொங்கவிடப்பட்ட கடிகாரத்தின்
சுழற்சியில் கோள்களின் நகர்வு விஞ்ஞானம்
***
கண்டுபிடிப்பை ஐந்தறிவோடு புகுத்தி
தாக்கத்தை மனிதனுக்காய் வகுக்கும்
மருந்துகளின் தாகத்தின் விவேகம்
மனிதனின் பிணி தீர்க்கும் விஞ்ஞானம்
***
கடவுளிடம் பாடம் கற்ற மனிதனும்
இங்கே இல்லை.மண்ணோடு பேசியவன்
எங்கும் இல்லை.ஆனால் உயிரோடு
உரையாடும் மொழியில்லா தொடுகை விஞ்ஞானம்
***
உலகத்தின் சுவாசப்பையில் தோன்றிய
புற்றுநோய்க்கு மருந்து தேடி
செவ்வாய் பயணிக்கும் மனிதனின்
துணிவும் புதுமைகள் நிறைந்த விஞ்ஞானம்
***

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (9-Nov-15, 1:31 pm)
பார்வை : 489

மேலே