நெஞ்சோடு வாழும் திருநாளாம் --முஹம்மத் ஸர்பான்

மா விளக்கு கோலத்தில்
கன்னிகள் தீபஒளி ஏற்றி
அன்பெனும் சக்கரையில்
இனிப்புக்கள் பகிர்ந்து
புன்னகை எனும் நெய் ஊற்றி
சமைத்ததை கூடி உண்டு
வெடி வெடித்து விண்ணோடு
பூ பூக்கும் திருநாளாம்.

புத்தாடை ஓவியத்தில்
புதுமணம் வீசும் காவியம் எழுதி
வித்தகக் கவிஞனின்
வரிகளில் வாழ்த்துக்கள் பகிர்ந்து
கோவில் குளத்தின் அருகில்
தங்கமீனுக்கு இரைகள் தூவி
மலருக்கு பனித்துளிகளால்
ஆடைகள் நெய்யும் திருநாளாம்


இரவெல்லாம் சிறு மலர்களின்
கொண்டாத்தில் அயராது ரசித்து
அதிகாலை பகலவனின் முகத்தை
குங்குமம் வைத்து மஞ்சளால் நீராட்டி
சோலைகளின் வளாகத்தில்
மொட்டுக்கள் வெடிக்கும் காட்சி ரசித்து
ஊரெல்லாம் மகிழ்ச்சி தீபம்
ஏற்றி நெஞ்சோடு வாழும் திருநாளாம்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (9-Nov-15, 1:57 pm)
பார்வை : 82

மேலே