எப்படி அகற்றுவேன் ? என் மூட நம்பிக்கையை..
காரல் மார்க்ஸ்
முதல்
பெரியார் வரை..
போற்றிய காதல் திருமணம்..
பெற்றோர்களால்
போற்றப் படுவது எப்போது?
சாதிகளால்
சிதறுண்டு கிடக்கும் ..
சமுதாயம் ..
சமநிலையை அடைவது எப்பொழுது?
காதல் திருமணத்தை
போற்ற நினைக்கும்
பெற்றோரின்
எண்ணங்களை கூட ..
வண்ண திரை மூலமாய்
தகர்த்தெறிய ..
கௌதம் மேனன் போன்ற
பிற்போக்கு சிந்தனையாளர்கள்..
பெற்றோரின்
அன்பு /அடக்குமுறை
வேலியை தாண்டுவதை..
விண்ணை தாண்டும்
அசாத்திய நிகழ்வாக சித்தரித்து ..
காதலை ஏற்பது கொடுஞ்செயல் என
கற்பிக்கின்றனரே ..
காதல்
வலியதே அன்றி ..
வலியை தருவது அன்று என..
காதலர்கள்
களிப்புடன் கூறும்..
காலம் வந்துவிடட்டுமென..
ஏங்கும் என்
மனதின்..
மூட நம்பிக்கையை..
எப்படி அகற்றுவேன் ?