அண்ணாவின் நினைவுகளை பறைசாற்றும் சின்னங்கள்
அண்ணாவின் நினைவுகளை பறைசாற்றும் சின்னங்கள்
--------------
இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த, வலிமையான அரசியல் தலைவர்களுள் ஒருவராக கருதப்பட்டவர் அறிஞர் அண்ணா. அது மட்டுமல்லாமல் இவர் அனைவராலும் பாராட்டுப்பெற்ற ஒரு சிறந்த பேச்சாளராகவும், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய எழுத்தாளராகவும் மற்றும் ஒரு மேடை நாடகராகவும் புகழ் பெற்றவர்.
இவர் பெரியாரின் திராவிடக் கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழத்தை துவக்கி தமிழக முதல்வராக பல செயற்கறிய காரியங்களை செய்தார்.
திமுகவில் கட்சி பிளவு ஏற்பட்டு நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனால் 1972ம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.இ.அ.தி.மு.க) என்ற புதிய கட்சி அண்ணாவின் பெயரால் உருவாக்கப்பட்டது.
அண்ணாவை நினைவு கூறும் வகையில் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புக்கு “அண்ணா நகர்” என பெயரிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தற்போதிய திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு அவரின் நினைவாக “அண்ணா அறிவாலயம்” என்றும் பெயர்சூட்டப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு “அண்ணா சாலை” என அவரது பெயரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சிலை கூட அங்கு அமைக்கப்பட்டது.
மேலும் “அண்ணா நூற்றாண்டு நூலகம்” அண்ணாதுரை என்ற உயர்ந்த மனிதருக்கு காணிக்கையாக 2010 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது.
வாணிஸ்ரீ சிவகுமார் -