என் கவிதைகள் என்னுடனே

என் கவிதைகள் என்னுடனே
இருக்கட்டும் - அவை
வெளிப்பட்டால் பல மனங்கள்
புன்ணாகும் - சில உறவுகள்
பாழாகும்.,

ஆதலால் குமறும்
எரிமலையாய் கவிதைகள்
என்னுள் இருக்கட்டும்.

மன விளிம்பை தாண்டி
என் பேனா நுனியால்
கசிந்தாலும் அவை கறை
படிந்த தாள்களோடு நிக்கட்டும்..
அதை தாண்டி உன்
விழிகளில் எட்ட வேண்டாம்
என் கவிதைகள் என்னுடனே
இருக்கட்டும்..............

எழுதியவர் : (8-Jun-11, 11:29 am)
சேர்த்தது : சாய்கிருஷ்னா
பார்வை : 293

மேலே