தீவளி

சேட்டுவீட்டு வாசலிலே கிடந்த பட்டாசு...
ரோட்டுக்கடை மவராசன் கொடுத்த மிட்டாயி.....
நேத்தைக்குத்தான் தச்சுவச்ச கந்ததுணிகதான்....
மொத்தத்துல எங்களுக்கு இனிக்கும் தீவாளி.....

ரேஷன் கார்டை காட்டி வாங்கும் வேட்டி, சேலைதான்
நாலு புள்ள டவுசர், சட்ட ஆகிப் போச்சுங்க.....!
மாமி வீட்டில் தந்தனுப்பும் மீந்த சோறுதான்....
மூனுவேல விருந்து சோறா மாறிப் போச்சுங்க....!!

பட்டாசா வாழ்க்கையையே சுட்டு போடுறோம்...நீங்க
வந்துபுட்டா வெடி வெடிச்சு ஆட்டம் போடுறோம்.....
ஓட்டுக்கேக்க நோட்ட நீட்டி, பேசிப் போனீங்க....
வாட்டம் மட்டும் மாறாம வருசம் போச்சுங்க.....!!

அம்மா வந்தா, ஐயா வந்தா....அதிஷ்டமின்னாக.....
சும்மா தந்த எல்லாத்தையும் சொரண்டிகிட்டாங்க.....
தள்ளாடுற எங்க வாழ்க்க எப்ப மாறுங்க.....?!
நல்லாயில்ல உங்க திட்டம், "மாத்தி யோசிங்க.....!!"

அரசியல்-னா என்னவேணா பண்ணிட்டுப் போங்க....எங்க
அரவயித்து சோத்துக்காச்சும் வழிய சொல்லுங்க......!!
சேட்டுவீட்டில் வெடிவெடிச்சா குடிசை எரியுங்க.....எங்க
சேரிசனங்க வவுத்தெரிஞ்சா ஆட்சி கவிழுங்க.....!!

எழுதியவர் : (12-Nov-15, 1:57 am)
சேர்த்தது : இரவி
பார்வை : 93

மேலே