அம்மா இது சத்தியம்

அம்மா இது சத்தியம்....
______________________
சத்தியமாய் நீ என்றும் பேசியது இல்லை...
ஆனாலும் சொல்ல நினைப்பதை நன்கு சொல்வாய்...
எக்கணமும் உனக்காக வாழ்ந்ததில்லை
எனினும் மற்றவரை வாழவைத்தாய்...
உன்னுடன் நான் அதிக நேரம் செலவழித்தது இல்லை
இன்றோ உன் நினைவாகவே இருந்க்கின்றேன்...
கள்ளம் கபடம் இல்லாமல் வாழ்ந்திட்டாய்
கண்மணிபோல் எனை பொத்தி வளர்த்தாய்
இனி என்றும் நீ திரும்ப மாட்டாய்
இதயம் துடிக்கின்றது அம்மா !!!
என்றும் உன் நினைவில்
திருமதி. மைதிலி ராம்ஜி