எழு பிறவிக்கும் என் தாயாவாயா நீ

ஐய்ந்திரண்டு மாதம்
பத்திரமாய் என்னை சுமந்த உன்னை
இன்னும் ஆயிரம் ஜென்மங்களுக்கு
சுமக்க ஆசை
என் வீட்டு குலசாமியாய்

எப்பொழுதும் என் நலம் மட்டும்
உன் நலமென்று
சுயநலமற்ற தூயவளாய்
என் துயர் துடைக்கும் தேவதையாய்
என் வாழ்வெங்கும் என்னுடன் பயணிக்க உனைப்
பிரியா வரமொன்றை தந்தருள
வேண்டும் நீயே

நான் கலங்கி நின்ற
கணமெல்லாம் கலங்காது
துணை நின்று என் கவலைகளை வென்று
எனை தலை நிமிர வைக்க நீ
செய்த போராட்டம் என்றும் அழியாது
என் நினைவை விட்டு அகலாது.

கவலைகள் பல இருந்தும்
உன் இதழ்களில் புன்னகையால்
அதை மறைத்து என்றும்
மகிழ்ச்சியாய் வாழ கற்று கொடுத்து
வழிகாட்டியாய் வந்த என் குல விளக்கே

என் அம்மாவாக இந்த பிறவி
மட்டுமல்லாது என் எழு பிறவிக்கும்
என்னுடன் வந்து விடு அம்மா...

எழுதியவர் : சதீஷ் குமார் (13-Nov-15, 12:06 pm)
பார்வை : 294

மேலே