கடைசியில் எனக்கு ஒருவழி தோன்றிற்று

36. கடைசியில் எனக்கு ஒருவழி தோன்றிற்று


காந்தியடிகள் எந்தப்பொருளையும் வீணாக்குவதில்லை. பழைய தபால் உறைகளைக்கூட அவர்பயன்படுத்துவார். கடிதங்களில் உள்ள காலிப்பகுதிகளைக் கத்தரித்துச் சேர்த்துவைத்துக்கொள்வார். பார்சல்களின் மேலுள்ள உறைகளையும் பத்திரிக்கள் வைத்துவரும் உறைகளையும் சேர்த்து வைத்து உபயோகப்படுத்திக்கொள்வார். இப்படி சேர்த்து வைத்த துண்டுக் காகிதங்களின் மேல் தம் கருத்துக்களை எழுதுவார். அல்லது அன்றாடம கணக்குகளை எழுதிக்கொள்வார். துரதிஷ்டவசமாக அநேகக்காகிதங்கள் காணாமற் போய்விட்டன. ஆனால் கிடைத்த காகிதங்களை வைத்துக்கொண்டு பார்க்கையில், பத்திரிகை ஆசிரியர் தொழில், அச்சு சம்மந்தமான எப்பேர்பட்ட நுணுக்கங்களையெல்லாம் காந்தியடிகள் இந்தத் துண்டு காகிதங்களில் எழுதி வந்தார் என்பது புலனாகிறது. அவர் பேசா நோன்பு மேற்கொள்ளும் நாட்களில் இப்படிப்பட்ட கழிவுக் காகிதங்கள் மிகமிக உபயோகப்பட்டன.

ஒரு நாள் கிருஷ்ணதாஸ், காந்தியடிகளைப் பார்க்க அவருடைய அறையில் நுழைந்தபோது அடிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ‘கிருஸ்ணதாஸ், எனக்குத் தினந்தோறும் அநேக தந்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவைகளை யெல்லாம் கிழித்து எறியச்செய்தேன். இதனால் எனக்கு மிகுந்த வருத்தம்தான். இவைகளை எந்த வித்திலாவது உபயோகப்படுத்த முடியாதா என யோசித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் எனக்கு ஒரு வழி தோன்றிற்று” என்றார் காந்தியடிகள்.

இவ்வாறு சொல்லிவிட்டு அவர் தந்திப்பார்ம் ஒன்றைக் கையில் எடுத்து அதை மடித்து எப்படி உறை செய்வது என்பதை விளக்கிச் சொன்னார். இனிமேல் உறைகள் எல்லாம் இம்மாதிரியே செய்யப்படவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

கிருஷ்ணதாஸ் இப்படியே செய்து வந்தார். பழைய காகிதங்களை உறையாக மாற்றி உபயோகிப்பதில் காந்தியடிகளுக்கு மிகுந்த ஆவல். புது உறைகளைக்கையால் தொடக்கூட மாட்டார். பழைய உறைகளைப் பயன்படுத்துவதில் அடிகளுக்குத் தனி ஆர்வம்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (12-Nov-15, 6:52 pm)
பார்வை : 83

மேலே