பேசும் உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கிறது

37. பேசும் உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கிறது
----

அப்போதிருந்த பீகார் கவர்னர், சம்பாரன் சம்மந்தமாகப்பேச காந்தியடிகளை அழைத்தபோது, அடிகளை எங்கு கைது செய்து விடுவார்களோ என்ற பயம் எல்லோருக்கும் இருந்தது.

அந்நாளில் கவர்னர் ராஞ்சியில் தங்கியிருந்தார். ராஞ்சிக்கு புறப்படும் போது காந்தியடிகள் நண்பர்களிடம், ”ஒரு வேளை தாம் கைது செய்யப்பட்டு விட்டாலும் இன்ன இன்ன வழிகளை மேற்கொண்டு வேலைகளை ஒழுங்காகச் செய்து கொண்டேயிருக்கவேண்டும்.” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

காந்தியடிகள் கவர்னரைச் சந்திக்க பத்துமணிக்குத் தனியாகவே சென்றார். ஒன்று அல்லது ஒன்றரை மணிவரை பேச்சுவார்த்தை நடைபெறும் என காந்திஜி நினைத்தார். ஆனால் அது மாலை ஐந்து ஆறுவரை நீண்டுக்கொண்டிருந்தது. அவருடைய நண்பர்கள் தந்தியின் வரவை எதிர் பாரத்த வண்ணமிருந்தனர். நாள் முழுவதும் கழிந்துவிட்டது. ஆனால் செய்தி ஒன்றுமில்ல்ஐ. காந்தியடிகளைக்கைது செய்துவிட்டார்கள் என்றே நண்பர்கள் எல்லோரும் நினைக்கத் தொடங்கினர். மறுநாள் தந்தி வந்தது; நேற்று கவர்னருடன் நிறைய பேச்சு நடந்தது; இன்றும் நடைபெறும் ” என்று தந்தி வாசகம் இருந்தது.

கடைசியில் காந்தியடிகள் தன்னுடைய பேச்சுத் திறமையால் சம்பாரனில் நடந்த நிகழ்ச்சிகள் விசாரணைக்குரியவையே என்பதனைக் கவர்னருக்குப் புரியவைத்தார். கவர்னர் உடனே ஓர் விசாரணைக்குழுவை நியமித்து, தாங்களும் இதில் இருக்கவேண்டும்” என காந்தியடிகளை வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார்.

அடிகள் உடனே இதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் கவர்னர் ”தாங்கள் குழுவில் இருந்தால் தான் இந்த நூறு ஆண்டுகளில் அரசாங்க அலுவலர்கள் இந்திய மக்களிடம் எப்படி நடந்துகொண்டார்கள் என்ற உண்மையைத் தெரிவிக்க முடியும்; இல்லையென்றால் குழுவின் அறிக்கை தங்கள் பார்வைக்கு வராமற் போய்விடலாம்” என காந்தியிடம் கூறினார்.

கவர்னர் இவ்வாறு கூறியதைக் கேட்டு அடிகள் சம்மதித்தார். ஆனால் தம் நணபர்களிடம், ”இந்தக் குழுவில் நடைபெறும் பேச்சு வார்த்தைகளைப்பற்றி மக்களிடம் சொல்லவும் அல்லது பத்திரிக்கைகளில் எழுதவும் உங்களில் யாரும் முற்படக்கூடாது. இது சம்பந்தமாகப் பேசும் உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கிறுது” எனக் கூறினார்.

இந்த விசாரணைக் குழு அரசாங்கத்திற்குத் தன் அறிக்கை கொடுத்ததின் விளைவாக அவுரித் தோட்ட முதலாளிகளான வெள்ளையர்களின் ஆடம்பர வாழ்க்கை அழிந்தது. இருந்தாலும் அவர்கள் காந்தியடிகளின் நண்பர்களாகவே தொடர்ந்து இருந்து வந்தனர்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (12-Nov-15, 6:53 pm)
பார்வை : 143

சிறந்த கட்டுரைகள்

மேலே