கர்மயோகிகளின் நிலை - ஒரு மனிதன் கெட்டது செய்யாமல் இருக்கவே முடியாது

கர்மயோகிகளின் நிலை ………………………………………………………………

இறைசித்தம் இல்லாமல் எதுவும் நடவாது :

நாம் இறைவனைத்தேடும்போது பிரார்த்தனை தியானம் சிறு தொண்டு கோவிலில் செய்யும் போது அது வாரீசுகளுக்கு எவ்வளவு அருள்பலத்தை அனுகூலத்தை கொண்டுவரும் என்பதை நிறையப்பேர் உணர்வதில்லை

செயல் புரியும் இடம் ; செய்பவன் ; வெவ்வேறு விதமான கருவிகள் அல்லது புலன்கள் ; பலதரப்பட்ட முயற்சிகள் ; எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் சித்தம் என்ற ஐந்தும் செயல்கள் நடக்க காரணிகளாகும் டம் ; பொருள் ; ஏவல் ;முயற்சி ; இறைசித்தம் இவ்வைந்தும் இல்லாமல் காரியசித்தி கைகூடாது
புறத்தில் இடம் என்பது அகத்தில் நம் சரீரமாகும்.

புறத்தில் பொருள் என்பது அகத்தில் நம் ஆத்மாவாகும் . புறத்திலே கருவிகள் என்பது அகத்திலே நமது புலன்களாகும் இத்தோடு பலதரப்பட்ட முயற்சிகளும் இறைசித்தமும் இல்லாமல் எக்காரியமும் நிறைவடையாது

அப்படியாயின் ஒரு காரியம் நிறைவடைவது நமது கரத்தில் மட்டும் இல்லை . பொறுப்புதாரி நாம் என்றாலும் முடிவு இறைவனின் சித்தத்தை பொறுத்து அமைகிறது

இந்த ஐந்தில் நான்கு நாம் நமது உடல்; ஆத்மா; புலன்கள்; முயற்சி ஒரு தட்டு என்றால் அடுத்த தட்டு இறைவன் . நாம் இறைவனை வேண்டாது அவரிடம் ஒப்புவிக்காது நமது அக்கறை பாதிக்கிணறு தாண்டாது . இறைவனின் கிருபை இல்லாமல் எதுவும் நடவாது என்ற தெளிவில்லாத ஆத்மாக்கள் தாங்கள் செய்ததை அப்படி செய்தேன் இப்படி செய்தேன் என பெருமை பேசுவதுபோலவே தங்களால் ஆகாத காரியத்தை ஜீரணிக்க முடியாமல் நொந்துபோன உள்ளத்தோடு கடைசி நாட்களை கடத்துகிறார்கள்

ஆனால் மாபெரும் காரிய சித்தியாளர்களும் இறைசித்தத்தால் இவை நடந்தது என்ற உணர்வால் அலட்டாமலேயே இருந்துகொள்கிறார்கள் ; அவர்கள் நிறைவேறாத எவற்றுக்காகவும் கவலைப்படுவதுமில்லை ; ஏங்குவதுமில்லை.

மாபெரும் காரிய சித்தியாளர்களும் இறைசித்தத்தால் இவை நடந்தது என்ற உணர்வால் அலட்டாமலேயே இருந்துகொள்கிறார்கள் ; அவர்கள் நிறைவேறாத எவற்றுக்காகவும் கவலைப்படுவதுமில்லை ; ஏங்குவதுமில்லை

மனிதன் தன்னுடைய உடல் ; மனம் ; வாக்கால் நல்லதோ கெட்டதோ எந்தவொரு காரியம் செய்தாலும் அதற்கு இவ்வைந்தும் காரணமாம் இவ்வாறாக கூட இருந்து காரியம் செய்கிறவனாக மட்டுமே தன்னை உணராதவன் முட்டாள் . அவன் இறைவனைக்குறித்த அறிவின்மையாலேயே அப்படி உணர்கிறான் .

எவனுடைய இயல்பு அகங்காரமின்றி இருக்கிறதோ ; எவனுடைய புத்தி உலகப்பற்று இல்லாமல் இருக்கிறதோ அவன் பூமியில் கொலை செய்யவே நேர்ந்தாலும் பாவம் அவனை பற்றாது.

ஒரு மனிதன் கெட்டது செய்யாமல் இருக்கவே முடியாது .

ஏனெனில் ஒரு காரியம் அந்த இடத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களின் பாவபுண்ணியங்களின் ஒட்டு மொத்த காரணத்தால் நடக்கிறது.

அங்கு ஒரு ஆத்மாவுக்கு முற்பிறவி பலனாக ஒரு கெடுதல் நடந்தாக வேண்டுமானால் இருக்கிற நம்மைக்கொண்டு அது இறைவனால் செய்யப்படலாம்.

ஆகவே கைப்பிசகாக பல நடந்துகொண்டே இருக்கும் . அந்த தவறுகளைக்குறித்து இறைவனிடம் வருந்தி பிரார்தித்துக்கொள்ள மட்டுமே நமக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது . நம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்திக்கமட்டுமே பிராயச்சித்தமாக உள்ளது.

ஆனால் மனித முயற்சியால் நம்மை உத்தமனாக ஆக்கிக்கொள்ள முடியாது ; உத்தமானாகவும் கருதக்கூடாது எப்போதும் இறைவனிடம் தாழ்ந்த மனநிலை ஒன்றே நம்மை கடைத்தேற்றும் .
நாம் செய்த நன்மைகளையும் இறைவனுக்கே ஒப்புவித்துவிட்டு அதைக்குறித்து பெருமைப்படாத ஒருவரால் மட்டுமே நாம் செய்த தீமைகளையும் இறைவனுக்கே ஒப்புவித்துவிட்டு அந்த பாவத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் .

செய்த நன்மைகளுக்காக பாராட்டுதல்கள் குவியும்போதும் அதை இறைவனே நம்மை கருவியாக வைத்து செய்துகொண்டார் என்று சுயபெருமைப்படாத ஒருவராலேயே இறைவனின் சித்தப்படியாகவே பாவம் நேர்ந்தாலும் அதன் பாவத்தால் பீடிக்கப்படாது இறைவனிடம் ஒப்புவிக்க முடியும் அது இறைசித்தம் இதுவென உணர்ந்து யுத்தத்திற்காக யுத்தம் செய்த கர்மயோகிகளின் நிலை -


கீதை தமிழில் - சில முத்துகள்-

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (12-Nov-15, 9:27 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 119

மேலே