சிவனின் ஜந்து முகங்கள்

சதாசிவ மூர்த்தியின் ஆயிரத்தில் ஒரு கூறிலிருந்து தோன்றியவரே மகேசர். மகேச மூர்த்தி மகேச வடிவங்கள் என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறார். இவரே படைத்தல், காத்தல், ஒடுக்கல் ஆகியவற்றை நேரடியாக இயற்றுவதாய்ச் சொல்வார்கள். உருவத் திருமேனியுடன் காட்சி அளிக்கும் இவரின் வடிவங்களே இனி நாம் காணப் போவது. இந்த மகேச மூர்த்தி அடியவர்களைத் தண்டிக்கவும், அடியவர்களுக்கு உதவிகள் செய்து காக்கவும் பல வடிவங்களில் எடுத்துப் பல திருவிளையாடல்களைப் புரிகின்றார்.

இவரை நின்ற கோலம், அமர்ந்த கோலம், நாட்டியம் ஆடும் கூத்துக்கோலம், வாகங்களில் ஏறி வரும் கோலம், உக்கிரமாய் இருத்தல், சாந்த ஸ்வரூபியாய்க் காட்சி அளித்தல் எனப் பல்வேறு நிலைகளிலும் அதாவது சதாசிவ மூர்த்தியின் மகேச மூர்த்திக்கு ஒரு முகம், மூன்று கண்கள், ஜடா மகுடம், நான்கு கரங்கள், ஆகியவற்றுடன் காட்சி அளிக்கின்றார். பின்னிரு கரங்களில் மானும், மழுவும் காணப்படும். முன்னிரு கரங்கள் அபயஹஸ்தமாகக் காண்கின்றது. மகேச்வர வடிவங்களைச் சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களுக்கும் பொருந்துமாறு 25 விதங்களில் குறிப்பிடுவார்கள்.

1.சத்யோ ஜாதம்:சத்யோஜாத முகத்தில் இருந்து தோன்றியவர்கள்
1.லிங்கோத்பவர்
2.சுகாசனர்
3.உமா மகேசுவரர்
4.சங்கர நாராயணர்
5. அர்த்த நாரீசுவரர்.

2.வாமதேவம்:வாமதேவ முகத்தில் இருந்து தோன்றியவர்கள்
1.கங்காளர்
2.சக்ரதானர்
3.கஜமுக அனுக்ரஹர்
4,.சண்டோ அனுக்ரஹர்
5.ஏக பாதர்

3.அகோரம்:அகோர முகத்தில் இருந்து தோன்றியவர்கள்
1.கஜ சம்ஹார மூர்த்தி
2.வீரபத்ரர்
3.தட்சினா மூர்த்தி
4,கிராத மூர்த்தி
5.நீலகண்டர்

4.தற்புருடம்: தத்புருஷம் என்னும் முகத்தில் இருந்து தோன்றியவர்கள்
1.பிட்சாடன மூர்த்தி
2.காமதகனர்
3.கால சம்ஹாரர்
4.ஜலந்தரவதர்
5.திரிபுராந்தகர்

5.ஈசானம்: ஈசான முகத்தில் இருந்து தோன்றியவர்கள்
இம்முகத்தின் மூலம் ஆகம இரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.
1.சோமாஸ்கந்தர்
2.நடராஜர்
3.ரிஷபாரூடர்
4.கல்யாண சுந்தரர்
5. சந்திர சேகரர்

உலகத்தார் உய்யும் பொருட்டும், உலகைக் காக்கவும் ஈசன் பல வடிவங்களை எடுப்பதாய்ச் சிவனடியார்கள் கூற்று. அவை மூன்று வகைப் படும். அவை போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம். இதில் போகம் இன்பத்தையும், யோகம், அமைதியையும், வேகம், கோபத்தையும் குறிக்கின்றன.

பொதுவாக மகேச வடிவத்தை இல்லறத்தாரே பெரிதும் பூசை செய்வர் என்பது வழக்கு. அதற்கேற்பத் திருமூலரின் திருமந்திரத்திலும்,ஏழாம் தந்திரம் பாடல் எண் மூன்று, அத்தியாயம் 13. மாகேசுர பூஜையில் இவ்வாறு கூறுகின்றார்:

இலிங்கோற்பவர்சிவனது உருவத்திருமேனிகளில் ஒன்றாகும்.கருவறையின் பின் புறமாக மேற்கு நோக்கி அமைந்திருக்கும். இறைவனது பாதமும் முடியும் கண்ணிற்குப் புலப்படாத வகையில் இவ் வடிவம் அமைந்திருக்கும்.

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (12-Nov-15, 9:33 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 95

மேலே