சி வா ய ந ம
சிவன்
திராவிடர்களின் கடவுளெனவும், சைவர்களின் தலைவனாகவும் வழிபடக்கூடிய கடவுள் வடிவமே சிவன். சிவன் மும்மூர்த்திகளுள் ஒருவர்.முதல்வனும் என்றும், மூவரும் அவனே என்றும், மூவரும் அறியாதவர் என்னும் மிக பெரிய தத்துவத்தை சைவ சித்தாந்தம் கூறுகிறது.
சிவனை வழிபட்டோர்கள் உமா தேவி, உருத்திரன், திருமால், பிரம்மன், பிள்ளையார், முருகன், தேவர் முதல் இராவணன் வரை.எல்லோரும் அவன் அடிமை.சிவன் உருவாய் (நடராசன்), அருவுருவாய் (சிவலிங்கம்), அல்லுருவாய் நமக்குக் காட்சி அளிக்கிறார்.சிவனுக்குப் பிறப்பு இறப்பு இல்லை.இருவினையும் இல்லை,அவையவைசேர் பயனுருவா யல்லவுரு வாய்நின்றா னமருங்கோயில்- சம்பந்தர் சைவ சமயத்தவர்களது முழுமுதற் கடவுள் சிவனாகும்.
சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா,இலங்கை,நேபாளம் உட்பட பல நாடுகளில் கோயில்கள் பல உண்டு. சிவாயநம என்பது சிவபெருமானைப் போற்றிப் பாடும் மந்திரச் சொல்லாக உள்ளது. இதற்கு கீழ்கண்ட பொருள் உண்டு என்று இந்து சமயத்தில் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
சி - சிவனைக் குறிக்கும்
வா- அருளைக் குறிக்கும்.
ய - ஆன்மாவைக் குறிக்கும்
ந - திரோதத்தைக் குறிக்கும்
ம - மலமாயைக் குறிக்கும்
இலிங்கம்
சிவனது அரு உருவத்திருமேனிவடிவாகும்.
சிவலிங்கம்என்பது மாபெரும் சமயமான சைவத்தின் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வரிவம் ஆகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர். இவற்றுள் சிவலிங்கம் அல்லது லிங்கம் அருவுருவ நிலையாகும். இதன் மூலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தியாவில் லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இவ் வழிபாடு நிலவியிருக்கக்கூடும் எனக் கொள்ளத்தக்க சான்றுகள் கிடைத்துள்ளன.