என்னாச்சு இந்த மழைக்கு

இன்று மழை பொழியும் என்று
வானிலை அறிக்கையில்
திரு.ரமணன் அவர்கள் கூறிய சேதி
மேகத்தின் காதிற்கு எப்படி எட்டியது....
மழையாகி விடாமல் கொட்டியது....

ஒழுகும் வீடுடையோரும்
வெள்ளத்தால் அதையிழந்தோரும்
சாலையோர வியாபாரிகளும்
தினமுழைக்கும் தொழிலாளர்களும்
நிற்கச் சொல்லி மழையைத் திட்டியது
கேட்டும் கேளாதது போலல்லவா கொட்டியது....

மழையின் நெஞ்சுறுதி மிக கெட்டியது
அதனால் தானே என்னுடன் முட்டியது
என் தலைக்குள்ளிருக்கும் கவியூறும் சட்டியது
என் வலக்கையை எழுதச்சொல்லி தட்டியது

"என்னாச்சு இந்த மழைக்கு" என தலைப்பிட்டு
நான் இதை எழுதிய வேளை
மழை எனக்கு சொல்லிச் சென்றது வந்தனம்...
என் மனசுக்குள்ளே மணக்க ஆரம்பித்தது சந்தனம்...!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (13-Nov-15, 7:27 am)
பார்வை : 510

மேலே