காணாமற் போனாயோ

கொட்டியது வான்மழை, கோடுகளாய் மின்னலும்
வெட்டியது, விண்ணிலிடி வேட்டுவைக்க - கட்டியே
போட்டதுபோல் காணாமற் போனாயோ வெண்ணிலவே
பூட்டியதா ரென்றே புகல்.
பூட்டிய தாரெனப் பொன்நிலவே நீசொல்வாய்
வாட்டி வதைத்திடுவேன் வார்த்தைகளால் ! - மீட்டுவந்து
மீண்டு முனைவான் வெளியி லுலவவிட்டே
ஈண்டுக் களிப்பேன் இனிது .