உரிமைகள் பறிக்கப்படும் - போட்டிக் கவிதை
எல்லோருக்கும் உரிமையுண்டு பூமியிலென - அதை
====துச்சமாக மதித்தே துன்புறுத்துகின்றோம்
அல்லல்பல அனுதினமும் அதற்குகொடுத்தே - நாம்
====இச்சகத்தை ஆளவந்தோமென இன்புறுகின்றோம்
நீரழித்தோம் நிலமழித்தோம் வளியழித்தோம் - இன்று
====நச்சின்கரம் வானம்வரை பரவவிட்டுட்டோம்
தரம்மிகுந்த பூமிப்பெண்ணின் தராதரத்தினை - என்றோ
====இச்சையான செயல்களாலே அருகவிட்டுட்டோம்
பூமித்தாயின் சொத்தைமுழுதாய் கொள்ளையடித்தோம் - நம்
====மனதில்நாமே நல்லோரென வெள்ளையடித்தோம்
சாமிபயம் துளியுமின்றி சுரண்டுகின்றோம் - பூமி
====சாமியதிர்ந்து பேசும்பேச்சை தள்ளியேவைத்தோம்
மனிதராக பிறந்தோமொளிய மனிதாராயில்லை - நாம்
====புனிதமான பூமிப்பெண்ணை காக்கமறந்தோம்
இனிமேலும் திருந்தாவிடில் ஆவிஎரிக்கப்படும் - நமக்கு
====பூமிமீது உள்ள உரிமைகள் பறிக்கப்படும்...!!!!