புயலேமழையே கவிதை

*
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
புயலாக மாறி வந்தது கண்ணம்மா.
கனமழை பெய்து புரண்டு ஊரெங்கும்
வெள்ளமாக பாயுதடி கண்ணம்மா.
*
கடைகண்ணி போய்வர முடியலை
மருத்துவமனை நாட முடியலை கண்ணம்மா
டெங்கு மலேரியா நோய் கொடுமை
எங்கும் தாண்டவமாடுதடி கண்ணம்மா.
*
நெற்பயிர்கள் தலைசாய்த்து நீரில்
நீச்சலடித்து மிதக்குதடி கண்ணம்மா.
வாழைமரம் குலையோடு தலைசாய்ந்து
வாழ்வை இழந்து தவிக்குதடி கண்ணம்மா.
*
வீடு இழந்து உழைப்பு இழந்து மக்கள்
காசு தேட வழியில்லை கண்ணம்மா
ஏரி குளம் உடைப்பெடுத்து வெள்ளநீரு
ஊருக்குள்ளே பாயுதடி கண்ணம்மா
*
பட்டமரம் போலாகி அல்லல்படும்
வாழ்க்கையாச்சுதடி கண்ணம்மா - இந்தப்
பரிதாப நிலைமைப் பார்க்க யாரும்
பறந்துவர நேரமில்லையடி கண்ணம்மா??.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (14-Nov-15, 6:05 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 132

மேலே