திரும்பி வரவேயில்லை

திரும்பி வரவேயில்லை
அன்று ஒதுங்க இடம் தேடி அலைந்தது அந்தப் பூனை. வீட்டின் சற்று அடைசலான மூலையில் மூன்று குட்டிகளைப் போட்டது. அவைகள் வீட்டிற்குள் இயங்கவும் எங்கள் குரல் கேட்டால் ஓடிப் பதுங்கவும் கற்றுக்கொண்டன. மகன் பிரவீனுக்கு அவைகள் உயிர் உள்ள பொம்மைகள் ஆயின.
அவைகளின் கொட்டம் அதிகமானது. அன்று பிரவீனும் அவனது அப்பவும் அந்த மூன்று குட்டிகளையும் ஒரு சாக்கில் போட்டு கட்டி மீன் மார்க்கெட்டில் விட்டு விட்டு வந்தார்கள்.
மூன்று நாட்கள் கழித்து அந்த மூன்று குட்டிகளும் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டன. இது பிரவினுக்கு பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியது.அவனது அப்பாவிடம் கேட்டான் “ நாம பூனைக் குட்டிகளை மார்கெட்டில் விட்டுவிட்டு வந்தோம் எப்படியோ வழி கண்டுபிடித்து மூன்று நாட்களில் நம்ம வீட்டுக்கு வந்துவிட்டது. நம்ம தாத்தா பாட்டியை ஹோம்ல விட்டுட்டு வந்தோம் அவங்க ஏன் இன்னும் திரும்பி வரவேயில்லை.” என்றான்.
பிரவீனின் அப்பாவிற்கு தன் தவறு புரிந்தது. பிரவீனும் அவனது அப்பவும் ஹோமுக்கு கிளம்பினார்கள் அவர்களை அழைத்துவர.

எழுதியவர் : ராஜ்கவி சி. அருள் ஜோசப் ரா (14-Nov-15, 2:15 pm)
சேர்த்தது : rajkavi
பார்வை : 59

மேலே