உரிமைகள் பறிக்கப்படும்

உரிமைகள் பறிக்கப்படும்
உயர்தர அங்காடியிலிருந்துதான்
உங்களுக்கான உணவு வரும்
பெயர் கொண்டு அழைத்தாலே
உங்களுக்கோர் சிலிர்ப்பு வரும்
காலை நேர நடைபயணத்தில்
உங்களையும் அழைத்து செல்வார்
வாலை ஆட்டிக்கொண்டே நீங்களும்
அவர்களை இழுத்து செல்வீர்
மாதம் தவறினாலும் உங்களுக்கான
மருத்துவ சோதனை தவறுவதல்லை
சாதம் ஊட்டி கொஞ்சி விளையாடும்
வைபவங்களுக்கும் குறைவில்லை
விலங்குகளின் காதலன் தாங்கள்
என்று ஊருக்கெல்லாம் உரைத்திடுவார்
ஆனால்....
விலங்கை கழுத்தில் மாட்டி உங்களை
வீட்டுக்கு வெளியே நிறுத்திடுவார்
அந்நியன் ஒருவன் நுழைந்தால்....
வாய் ஓயாமல் குரைத்தலெ
உங்களுக்கான தொழில் என்பார்
"நாய்கள் ஜாக்கிரதை" என்ற பலகையும்
வெளிக் கதவில் மாட்டிடுவார்
ஆதலால் "ஜாக்கிரதை நாய்களே!"