நான் பிறந்திருந்தால் --முஹம்மத் ஸர்பான்

கடலிலுள்ள அலையாய் நான் பிறந்திருந்தால்
பேரலையாய் மாறி அகிலத்தின் பாவக்கறை அழித்திருப்பேன்.

கானகத்திலுள்ள சாந்தமான தென்றலாய்
நான் பிறந்திருந்தால்
புயலாய் மாறி கொள்ளையனை அழித்திருப்பேன்.

கறுப்புத்துணியால் கண்கள் மூடப்படாத
தர்ம தேவதையாய் நான் பிறந்திருந்தால்
கறுப்புச்சட்டை அணிந்த அலிபாபாக்களையும்,
காக்கிச்சட்டையணிந்த நாற்பது திருடர்களையும்
பதவி இறக்கம் செய்திருப்பேன்;குற்றத்தை அழித்திருப்பேன்.

விண்ணிலுள்ள மழையாய் நான் பிறந்திருந்தால்
ஏழை வீட்டில் அடுப்பெறியச் செய்திருப்பேன்.
செல்வன் போட்ட முதலீட்டை மண்ணோடு மண்ணாய் ஆக்கி
உலகில் வர்க்க பேதத்தை அழித்திருப்பேன்.

அகிலம் வெல்லும் மாவீரனாய் நான் பிறந்திருந்தால்
பெண்ணாடை கண்டாள் ஆணுறை தேடும் காமநாய்களின்
அந்தரங்கத்தை அறுத்தெறிந்திருப்பேன்.மண்ணில்
பெண்மைக்கு உரிமை மீட்டெடுத்து காமநாற்றத்தை அழித்திருப்பேன்.

சுட்டெறிக்கும் அக்கினியாய் நான் பிறந்திருந்தால்
நல்லவன் உடலை எறித்திருக்கமாட்டேன்.வஞ்சகன்
யாக்கையை தேடி தேடி அழித்திருப்பேன்.

உலகின் கற்பகத்தருவாய் நான் பிறந்திருந்தால்
தகுதியுடைய ஏழை வீட்டு அப்துல்கலாம்களை
தூக்கில் தோங்க விட்டிருக்க மாட்டேன்.

நான் பிறந்தது ஒரு சாதாரண தாயின் கருவறையில்
ஆதலால் என் முன்னால் நிகழும் பாவத்தை
கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (14-Nov-15, 7:02 pm)
பார்வை : 70

மேலே