கரையின் மௌனம்
யாருமற்ற
கடற்கரையில்
மணலின்
முனுமுனுப்புகளை
கேட்டபடி அமர்ந்திருக்கிறேன்.....!
குப்பைகளும்
கூழாங்க்கற்களுமாக
இந்த பரந்த
மணல்வெளியில்
நேற்று வருவதாகச்சொல்லி
ஏமாற்றிய
உன்னால் ஆழிபேரலைகளை
மனதில் சுமந்தபடி
முடியைக்கொதிகொள்கிறேன் ....!
எதிர்பர்ப்புகளுக்கு
நீயாகிய யென்னாலொரு
விடுதலை...
நினைவுகள் மட்டும்
கைதியாக ....!