நற்சொல்

காலத்தை நீ கணக்கிடு
கவலையை நீ ஓதிக்கிடு

வளர்ச்சிக்கு வழி வகுத்திடு
வறுமையை நீ ஒழித்திடு

முன்னோர்கள் சொல்லை மதித்திடு
முடியும் வரை உழைத்திடு

சோதனையை நீ தாங்கிடு
சொந்தங்களை நீ உணர்ந்திடு

பொறுமையாய் நீ வளர்ந்திடு
பெருமையாய் நீ வாழ்ந்திடு

கோபத்தை நீ தவிர்த்திடு
கொள்கையை நீ உயர்த்திடு

அன்பாய் நீ பகிர்ந்திடு
அறிவை நீ வளர்த்திடு

நல்லது செய்ய நீ துணிந்திடு
நட்போடு நீ நடந்திடு

தனித்து நீ ஜெயித்திடு
தாய் தந்தையை என்றும் காத்திடு.. மதித்திடு ...

எழுதியவர் : gomkarthik (16-Nov-15, 3:54 pm)
சேர்த்தது : ஆகார்த்திகேயன்
பார்வை : 112

மேலே