உரிமைகள் பறிக்கப்படும்
உரிமைகள் பறிக்கப்படும்
(படைப்பு - நாகசுந்தரம் user : nksonline )
உனக்கு இறைவன் அழகு தந்தான்
நல் அறிவு தந்தான்
குணத்தை தந்தான்
நல் குடும்பம் தந்தான்
உறவுகள் மதிக்க உதவி செய்தான்
மனைவி தந்தான் மக்கள் தந்தான்
துணை வரதோழன் தந்தான்
பட்டம் தந்தான் பதவி தந்தான்
இட்டமுடன் வாழ இடம் தந்தான்
செல்வம் தந்தான் உரமிகு உள்ளம் தந்தான்
இத்தனையும் தந்த அவனுக்கு நீ
என்ன தந்தாய் ?
ஒரு மலர் ! ஒரு கனி ! ஒரு இலை !
ஏதாவது தந்தாயா?
ஒன்றும் தராவிட்டாலும்
நன்றியுடன் அவனை ஒரு முறை நினைத்தாயா?
இப்படியே இருந்தால்
உன் உரிமைகள் பறிக்கப்படும் நாள் வரலாம் !
அவன் கருணை மிக்கவன் ! ஒரு முறை நீ அவனை நினைத்தால்
பறிக்கப்பட்டதை கூட அவன் தருவான்
நினைமின் நினைமின் நல்லவனாம் இறையை நினைமின்.