அரும்பு
ஒரு மழழை நதியிலே
நான் முகம் பார்க்கிறேன்
ஒவ்வொன்றாய் ரசித்து
ஒரு நொடி கவிஞனாகிறேன்
கலங்கமில்லா சிரிப்பிலே
காதல் கொள்கிறேன்...
சிற்றுறக்க சிணுங்களில்
சிரிக்குதே உன் மெத்தை
சிறுபிள்ளை சிந்தனையில்
சிக்குதே என் சிந்தை
உலகின் மொழியில்
நீ ஏதுமறியா பேதை
எனது விழியில் வாழ்வை
ரசிக்க வைத்த தேவதை
முன்னிரண்டு பற்கள்
முளைவிட்டு எழுகையிலே
கண்ணிரண்டை விரித்து
கதைகளினை கேட்கையிலே
பால் வாசம் வீசும்
மல்லியரும்பு என் பக்கத்திலே...
உறவுகளோடு உலகைப் படைத்தவனே!
இதென்ன உறவு?
உன்னோடு இருக்கும் உணர்வு...
இறைவா! வரம் கொடு
இவன் உலகத்தில்
உயிர்ப்பெறும் பொம்மையாய்
நான் பிறக்க...!!!