அரும்புகள்

ஆளுக்கு ஒரு பொருள் என்று
அம்மாவிடம் முட்டி மோதி
சொன்ன பொருளுடன் தினமும்
விளையாடும் மரத்துக்கு அருகில் வந்தாயிற்று
பக்கத்துக்கு வீட்டு அக்காவிடம்
கேட்டு எப்படியோ சமைத்தாகிவிட்டது!
சிறு சிறு இலைகளுடன் வரிசையாக அமர
கண்களில் மின்னலோடு அனைத்து
இலைக்கும் உணவு கேட்டு கேட்டு பரிமாறப்பட்டது
உப்பு,புளி, காரம் எதுவும் இல்லை
ஆனால் வானையே வளைத்து விட்ட சந்தோசத்தில்
துள்ளலோடு ஆட்டமும் பாட்டமும்!
கூட்டாஞ்சோறு விளையாடும் அந்த பிஞ்சு நெஞ்சங்களிடம்
கற்க வேண்டும் சமத்துவமும்,விருந்தோம்பலும்

எழுதியவர் : aysha (17-Nov-15, 5:44 pm)
Tanglish : arumpukal
பார்வை : 57

மேலே