சென்னையின் நிலப்பரப்பின் இயற்கையாகவே மிகவும் மோசமான படுகை - சாவி வார இதழ்

##‪#‎பொதுவாக‬ பூலோக அமைப்பு அடிப்படையில் சென்னை பெரிய புயலுக்கோ, பெரிய மழைக்காலத்திலொ வாழ்வதற்கான இடமல்ல....

சுமார் 178 கிமீ பரப்பு உள்ள சென்னையின் Elevation அதாவது கடல் மட்டத்திலிருந்து வெறும் 6 to 10 மீ உயரமே உள்ளது...

##பொதுவாக மழைநீரானது மேட்டுப்பகுதியிலிருந்து பள்ளத்தை நோக்கி வருவது இயல்பு....எனவே சென்னையை சுற்றியுள்ள கடல் மட்டத்திற்கு 10மீ மேல் அனைத்து மழை தண்ணீரும் சென்னையை நோக்கி தான் வரும்....

#‪#‎அதிலும்‬ சென்னையின் நிலப்பரப்பின் படுகை யானது (terrain slope) இயற்கையாகவே மிகவும் மோசமான படுகையாக (flat terrain) 1:5000 to 1:10000 என இருக்கிறது..

#‪#‎அதாவது‬ தண்ணீர் 5000 மீ முதல் 100000 மீ அல்லது 5 கி.மீ முதல் 10 கிமீ. தூரம் பயணம் செய்தால் தான் 1 மீ (depth )பள்ளம் குறைவாக உள்ள இடம் கிடைக்கும்.

அதனால் இயற்கையாகவே மழை தண்ணீர் விரைவாக கடத்த இயலாதுஅதனால் தான் பெரும் மழை காலத்தில் மற்ற பெருநகரங்களை (மதுரை, கோவை, திருச்சி, சேலம்) விட சென்னையில் மட்டும் மழை நீர் வடிவதற்கு நாள் கணக்கில் ஆகிறது.

##‪#‎இந்த‬ சூழலில் சராசரி சென்னைவாசி ஒருவர் , தான் வசிக்க வீடு கட்ட இடம் வாங்கினால் அவரின் சராசரி பட்ஜெட்க்கு ஏதுவாக ஏதாவது பள்ளமான பகுதியே (கைவிடப்பட்ட ஏரி)க்குல் தான் கிடைக்கும்....உண்மையில் அது ஏரி என்பதே அவருக்கு தெரியாது...

##அதாவது அவரின் இருப்பிடம் கடல் மட்டத்திலிருந்து மிக மிக குறைந்த உயரத்தில் 3 மீ முதல் 5 மீ வரை தான் இருக்கும்...இப்படி உருவான சிறு சிறு நகரங்கள் தான் இப்போது மழைநீர் வெளியேற வழியில்லாமல் தத்தளிக்கின்றன.....இவை வடிவதற்கு நாள் கணக்கில் ஆகலாம்.

##‪#‎அதனால்‬ தான் எம்.ஜி.யார் முதல்வராக இருந்த பொழுது இப்படியான வெள்ள காலத்திற்கு பின் தமிழக தலைநகரை திருச்சிக்கு மாற்றுவதற்கு கோப்புகள் பரபரப்பாக நகர்ந்தன. ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த கோப்பு கைவிடப்பட்டது.

சென்னைக்கு மீண்டும் 20, 25 வருடங்கள் கழித்து வரும் மழையால் வெள்ளத்தின் பாதிப்பு இதைவிட பல மடங்கு இருக்க வாய்ப்புகள் மிக அதிகம்.

##‪#‎பாரதி‬ தாசன், Assistant Executive Engineer,TNPWD சென்னை
- சாவி வார இதழ்

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (18-Nov-15, 6:59 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 124

மேலே