ஹைக்கூ
அழுக்கான பூமியை
நன்றாய் குளிப்பாட்டியது
வான் மழை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஓடும்நதி களைத்தது.
இதமாய் வீசி விட்டது
ஆற்றோர நாணல்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பரிதி முகங்காட்ட
கூம்பிய இதழ்விரித்துச் சிரித்தது
தண்ணீரில் தாமரை !