என் அன்பை புரிந்துகொள்ள

வார்த்தைகளின் வசீகரத்தில்
வாழ்ந்து கொண்டு
இரட்டை அர்த்த வசனங்களில் லயித்துக் கொண்டிருக்கும்
உன்னால்
என் மௌனத்தையோ
என் புன்னகையின் பொருளையோ
புரிந்துகொள்ள முடியாது

ஒரு கண்ணில் சந்தேகத்தையும்
மற்றொரு கண்ணில்
சதையை நோக்கும் பார்வையையும்
வைத்துக் கொண்டிருக்கும்
உன்னால்
என் ஏக்கங்களையோ
என் எண்ணங்களின் வெளிபாடுகளையோ
புரித்துகொள்ள முடியாது

முன்னழகு பின்னழகு பற்றியும்
பாலினம் பற்றியும் பேசிக்கொண்டிருக்கும்
உன்னால்
என் ஆழ்மனதின் அழகியலையும்
என் அன்பின் நுண்மங்களையும்
புரிந்துகொள்ள முடியாது

மன அழுக்குகளை கழித்துவிட்டு
ஆண்மை ஆடையை களைத்துவிட்டு
எதிர்ப்பார்ப்புகளின்றி
வெட்ட வெளியில் சலனமற்று நில்
என் அன்பின் வெளிபாடுகள்
உனக்கு புரியும்

எழுதியவர் : இ.ஆ.சதீஸ்குமார் (21-Nov-15, 10:26 am)
பார்வை : 313

மேலே