காதலில் கனிந்த மங்கை
காதலால் கனிந்த மங்கை கார்மேகம் சூழ்ந்த நங்கை காதலால் உன்னில் வந்தேன் நாணத்தால் தலைகவிழ்ந்து நவரசத்தை இதழில் வைத்து மோகத்தை முறுவலாக்கி மங்கையவள் காதல் கொண்டேன் என் தாவணியோ காற்றில் ஆட என் மேனி என்னுள்ஆட என் இடையோ ஒய்யாற நடனமாட என் மனமோ உன்னைதேட என்னில் பாட வா வா கண்ணா