பருவ மழை

நீ ............
மாதம் மும்மாரி
வந்தபோதுகூட
நாங்கள் ......
வருத்தப்பட்டதில்லை
ஏன் ? தெரியுமா !
மன்னர்கள் ஆட்சியில்
நீ ... வந்துபோக
ஏறி குளம் குட்டை
என்று ...வெட்டி
வைத்திருந்தார்கள்
நீ.....ஆர்பரித்து
ஓடிய இடங்களை
ஆறுகள் என்றார்கள் ..
இப்போ .....
நீ ......தங்கி வாழ்ந்த
இடங்கலயெல்லம்
மனிதன் ..
தன்வசபடுதிகொண்டான்
ஆற்று கரையோரங்களை
ஆக்கிரமிப்பு செய்துகொண்டான்
அதனால்தான் .....என்னவோ ?
நீ .....ஐப்பசி மாதத்தில்
ஆக்ரோஷமாய் பொழிகின்றாய்
வந்து போக ....வடிகால்
இல்லாமல் .....
சந்து பொந்துகளில் தேங்கி
சஞ்சலபடுகிறாய் .....
அதை வெள்ளநீரென்று
மனிதன் ..
வேதனை படுகிறான்
ஆற்றோர ஆக்கிரமிப்புகளை
நீ ..அடித்து செல்லும்போது
குடிசைகள் போனதென்று
குமுறி அழுகிறான்
நீர் ...தங்கும்
இடமெல்லாம்
மனிதா? நீ ...
தங்கிவிட்டால்
மழை நீர் கடலுக்கு போக
மா புரட்சி செய்கிறது
இந்த .....
வேலையற்ற
மனிதனின் ....
மூளையற்ற செயலுக்கு
பருவ மழையே ! நீதான்
முற்று புள்ளி .....
வைக்கவேண்டும் ..
இரா .மாயா