எந்த வேலை செய்வது

எந்த வேலை செய்வது?
======================

"பணம் சம்பாதிக்க ஒரு வேலை தேவை. அது சொந்த தொழிலாகவும் இருக்கலாம், அல்லது அரசாங்க வேலையாகவும் இருக்கலாம், ஐ.டி. போன்ற உயர்மட்ட தனியார் நிறுவன வேலையாகவும் இருக்கலாம் இது தான் இன்று நம்மில் பலரின் எண்ணமாக இருக்கிறது.

இதனால் கிடைத்த வேலையே போதும் என்று நமக்கு அதிகம் பிடிக்காத வேலையில் இருந்து விடுகின்றோம்.
இந்த மனப்பான்மையால், செய்யும் வேலையில் ஆர்வம் இழந்து விடுகின்றோம் படிக்கும் காலத்தில் வாழ்வில் எந்த உயரத்தை அடைய வேண்டும் என்று விரும்பினோமோ, அதை மறந்து செயல்பட்டுக் கொண்டிருப்போம்!
சாதாரண அலுவலக வேலையிலிருந்து விடுபட்டு, நீங்கள் உண்மையிலேயே விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க 10 சிறந்த வழிகள்.

1. வாழ்வின் முக்கியதுவம் : நம்மில் பலர் வயதான பிறகு நாம் ஏன் பலரைச் சந்தித்திருக்கக் கூடாது அல்லது அதிகக் கடினமாக உழைத்திருக்கக் கூடாது என்று யோசிப்பதுண்டு. சாதாரண அலுவலக வாழ்க்கையின் கட்டாயத்தை விட்டு நம் எதிர்காலத்தில் அடைய வேண்டிய குறிக்கோளுக்காக பாடுபடுவதில் தவறில்லை.

2. வாழ்க்கை ஒரு பாடம் : எதை நாம் விரும்புவதில்லையோ அதைப்பற்றி ( குறிப்பாக அர்த்தமற்ற வேலைகள், அலுவக அரசியல் போன்றவை ) எண்ணாமல், நாம் செய்ய விரும்பும் நம்பிக்கையுடன் வேலைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

3. உறுதியான சிந்தனை : தொழிலில் செயல்படுபவர்கள் தாங்கள் செய்யும் வேலையை நேசிக்கிறார்கள். அதுவே அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கிறது.

4. நம் நோக்கத்தில் உறுதி : உள்ளத்திலே ஏற்படும் பயத்தை உதரித்தள்ளி நாம் காணும் கனவை அடைய தைரியமாக முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அவற்றிலே நம் முழு கவனத்தையும் செலுத்துவது சிறந்தது.

5. உண்மை நிலை : "உங்கள் வீட்டிலே உட்கார்ந்தப்படி மாதம் ரூ 10,000/- சம்பாதிக்க வேண்டுமா, இதோ ஒரு எளிய வேலை" என்ற விளம்பரங்களை விட்டுத் தள்ள வேண்டும். நம் சொந்த முயற்சியில் தொழில் தொடங்குவதற்கு காலமும் கடின உழைப்பும் அதிகமாக தேவைப்படும்.

6. தகவல்களை திரட்டுவது : நாம் ஆரம்பிக்க விரும்பும் தொழில் பற்றிய பல தகவல்களை, நூலகங்களிலிருந்தும் அறிந்து அந்தத் தொழில் சம்பந்தப்பட்ட கூட்டமைப்புகளிலிருந்தும் சேகரித்து நம்மை தயார்படுத்திக் கொள்வது நல்லது.

7. கனவை நனவாக்குவது : நம் கனவுத் தொழிலைத் தொடங்க ஒரு கால நிர்ணயம் செய்துக் கொண்டு அந்த காலக் கட்டத்துக்குள் தொடங்க எல்லா முயற்சியையும் மேற் கொள்ள வேண்டும்.

8. மற்றவர்களுடைய ஆதரவு : உற்சாகம் என்பது தொற்று நோய் போல பரவும். ஆகவே உங்கள் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களின் ஆதரவை தேடிப் பெறவேண்டும்.

9. வேலையை தொடங்குவது : "ஒரு மலையை நகர்த்த வேண்டுமா? முதலில் ஒரு கல்லை நகர்த்துங்கள்" என்கிறது சீனப் பழமொழி. நம் மொத்த கனவுத் தொழிலைத் தொடங்க முதலில் அவற்றை சிறு சிறு பாகங்களாக பிரித்துக் கொண்டு ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்குவது நல்லது.

10. நன்றி உணர்வு : நம் எதிர்காலக் கனவை நினைவாக்க, இப்போது நாம் எவ்வளவு வேலைகளை செய்ய முடிகிறது என்பதை நன்றியுடன் நினைவு கொள்வது நல்லது.

எழுதியவர் : முக நூல் (23-Nov-15, 9:15 am)
பார்வை : 180

மேலே