ஆகாய வெண்ணிலாவே ~அர்ஷத்

(ஆகாய வெண்ணிலாவே பாடலின் மெட்டில்)

தேயாத பெண்ணிலாவே
கறைமீது வந்ததேனோ
அலையோடு கால்கள் சேர்த்து
மகிழ்ந்தாடும் வேளைதானோ ...

வானாடும் மேகமே
தரையிறங்கி செல்லமாய் ஆட ...
உறவாடும் ஆசையும் இனி
துள்ளி வெள்ளமாய் ஓட...

பூவானம் பூவையொன்று
பூமிமேல் பூத்ததின்று...
தேன்சிந்தும் பெண்மைகண்டு
கவிபாடும் மலரின்வண்டு ...

தென்னாட்டு அருவியென்று
தினம்கொட்டும் நாணம் நன்று...
கொடிபோலே சுத்தும் பெண்மை
மடிசாய வேண்டுமின்று...

இளமேனி உன்னை நானும் கசியாமல் பார்க்கவேண்டும்
அசையாமலுந்தன் அழகை இசையாக்கி பாடவேண்டும்!!!

கறைபோன்ற வாழ்விலே
நுரைபோல நினைவுகள் தேங்க ...
நடு சாம வேளையில்
இருவுயிரும் ஒன்றாய் தூங்க ...

பூவார பூவை கூட்டம்
பூ போல இவள் மட்டும்...
முகையவள் தேகமெங்கும்
மணம்வீச கூடுமின்பம்...

பாடாத மௌன ராகம்
நீ பாட வாகை சூடும்...
கேளாத குயிலின் ராகம்
இவள் பேச்சில் கேட்கக்கூடும்...

ஊன்வருடும் தென்றலின்று
உயிர்திருடி போவதென்ன ...
முத்தாடும் ஆசை வந்து
நெஞ்சோடு சொல்வதென்ன ...

இருள்கொண்ட சிகையிலே
தாழையாய் மனம் தவழ ...
தேவார வீதியில்
அலங்காரம் தினம் நிகழ ...

எழுதியவர் : அர்ஷத் (23-Nov-15, 4:23 pm)
பார்வை : 179

மேலே