test

காதல் தேர்வில்
தோற்றாலும் சோகம் தான்...
அவன் இருந்தால் நன்றாய் இருக்குமே
இந்த நாயோடு அல்லல் பட என்று...

ஜெயித்தாலும் சோகம் தான்...
போயும் போயும் இந்த மூஞ்சியை
தேடி பிடித்தேனே நான்
என்ற அங்கலாய்ப்பு நாள்தோறும்...

சொல்லி சொல்லி அடிக்கும்
சாணக்கியனாக இருந்துவிட்டால்
சொல்லாமல் விழும் அடிகளே
சொல்லி சொல்லி அழும்...

சுணங்கி படுத்து விட்டால்
பரலோகமும் பாதாளம் தான்...
கிடைத்ததை வைத்து காலம் தள்ளும்
தலைமுறையில் பிறந்து விட்டோம்...

சிலிர்த்தெழுவோம் சிதறி விடாமல்
சில்லரையாக சின்னா பின்னமாகாமல்
சீறிப் பாய்வோம் சிகரத்தை நோக்கி
சிந்தனை செய்து சீராக வாழ்வோம்...

தேர்ந்தெடுத்த தேர்வில் எல்லாம்
தோற்றுவிட்டாலும்
தோல்வியினை வெற்றியாக்கும்
பாடம் கற்போம் ...




எழுதியவர் : shruthi (9-Jun-11, 10:57 am)
சேர்த்தது : shruthi
பார்வை : 342

மேலே